இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers) நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas ) உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.