டோரதி – விமர்சனம்

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த் (சுப்பு), ரிஷிகாந்த் (கார்த்தி), கீர்த்தி சுரேஷ் (டோரதி), ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் இளையராஜா – இசையில் படம் என்ன சொல்ல வருகிறது

1990-களின் ஆரம்பம், மதுரை அருகே ஒரு கிராமம். சாதி, வன்முறை, ஆணாதிக்கம் நிறைந்த கொடூரமான சூழல் அது.

அங்கு வளரும் இரண்டு நண்பர்கள் கார்த்தி (ரிஷிகாந்த்) & சுப்பு (சனந்த்). சிறு வயதில் சுப்பு தான் கார்த்தியை புரூஸ்லீ போல சண்டை போட்டு காப்பாற்றுவான். பெரியவர்கள் ஆக ஆக கார்த்தி முரட்டு ரவுடியாகிறான், சுப்பு பயந்த சுபாவமாகிறான்.

 

அப்போது தான் சுப்புவின் வீட்டிற்கு அண்ணன் மனைவியாக வருகிறாள் டோரதி (கீர்த்தி சுரேஷ்). வீட்டில் அனைவரும் கொடூரமாக இருக்க, டோரதி மட்டும் தான்இவர்களிடம் கருணையாக, மனிதாபிமானத்துடன் நடக்கிறாள். அவளது கருணை இவர்களது உலகத்தையே கேள்வி கேட்கிறது.

திடீரென டோரதிக்கு ஒரு துயர சம்பவம் நடக்கிறது. .

அந்த சம்பவத்தால் மனமுடைந்த சுப்பு, சமூகத்திற்கு வெளியே வாழும் மக்களோடு சேர்ந்து வாழ போய்விடுகிறான். கார்த்திக்கு குடும்பத்தினர் கட்டளை இடுகிறார்கள் – சுப்புவை தேடி கொன்று விட்டு வா என்று.

பல வருடங்கள் கழித்து, கார்த்தி ஒரு லாரி டிரைவராக இந்திய நெடுஞ்சாலையில் நிற்கிறான். தான் சுப்புவை கொன்றுவிட்டதாக சுப்புவின் அண்ணன்களிடம் போனில் சொல்கிறான். உண்மையில் அவன் சுப்புவை தேடி போனானா? நட்பா? குடும்ப விசுவாசமா?

இது தான் படம் – நட்பு, காதல், குற்ற உணர்வு, இதன் கலவைதான் படம்.

.

சனந்த், ரிஷிகாந்த் இருவரும் அசாத்திய நடிப்பு. கீர்த்தி சுரேஷ் சிறிய ரோல் என்றாலும் தாக்கமான ரோல். ‘ஆண்கள் அழக்கூடாது’ என்று சொல்லிக்கொடுக்கப்படும் Emotional Conditioning-ஐ படம் உடைக்கிறது.. வன்முறை காட்சிகள் கனமானவை.

உளவியலையும் வாழ்வியலையும் பாகுபாடு இன்றி அலசி ஆராய்ந்து மனித இனம் இதுதான் இப்படிதான் என்று நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜா புதியதோர் களத்தில் புதிய கோணத்தில் தன் எண்ணங்களை எழுத்தாக்கி திரையில் வசனங்களால் செதுக்கி சொல்ல வேண்டியதை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்

மொத்தத்தில் டோரதி – கார்த்திக் சுப்புராஜின் மிக துணிச்சலான முயற்ச்சி

ரேட்டிங்-3/5

Comments (0)
Add Comment