உலகளவில் ஒரு இந்திய திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய முதல் வார இறுதி வசூலை கொடுத்த பிறகு, வார நாட்களிலும் இப்படம் சக்க போடு போடுகிறது. திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பான வசூலை பதிவு செய்து, இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வார நாள் வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இந்த ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், முதல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஆல்-டைம் ரெக்கார்ட் வசூலை பதிவு செய்து, இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டர் என்ற தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற துரந்தர் படத்தின் இந்த இரண்டாம் பாகம், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகளவில் ரூ.1000 கோடியை எட்டியது, மிக அதிக முதல் வார இறுதி வசூல் மற்றும் வார நாட்களில் வலுவான வசூலை தக்கவைத்தது என பல புதிய சாதனைகளை இந்திய திரைப்பட உலகிற்கு படைத்துள்ளது.
நாள் வாரியான வசூல் விவரம் – இந்தியா
முதல் வார இறுதி – ரூபாய் 466 கோடி
திங்கள் – ரூபாய் 64 கோடி
செவ்வாய் – ரூபாய் 58 கோடி
புதன் – ரூபாய்49 கோடி
வியாழன் – ரூபாய் 53 கோடி
முதல் வார மொத்தம் (8 நாட்கள்)
இந்தியா – ரூபாய் 690 கோடி (நெட்)
இந்தியா – ரூபாய் 814 கோடி (கிராஸ்)
வெளிநாடுகளில் – ரூபாய் 274 கோடி
உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ரூபாய் 1088 கோடிகள். இந்த படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது