கதை என்ன சொல்லுது?
இயக்குநர் தென்பாதியனோட ‘அங்கீகாரம்’ ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மட்டும் இல்ல. அது விளையாட்டு மைதானத்துல இருந்து நீதிமன்றம் வரைக்கும் நீளுற ஒரு போராட்டக் கதை.
படத்தோட மையம் ரொம்ப எளிமையானது ஆனா ஆழமானது. திறமை இருக்கு, கடுமையா உழைக்குறான், ஆனா சிஸ்டத்தோட அரசியல், அதிகார போட்டி, ஜாதி-பண பலம் எல்லாம் சேர்ந்து அவனை புறக்கணிக்குது. அப்படி தள்ளிவிடப்பட்ட ஒரு வீரன், தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்துக்காக சட்டத்தோட கதவை தட்டுறான். அந்த பயணம்தான் படம்.
வீர்கள் எதிர்கொள்ற மறைமுக அரசியல், தேர்வு கமிட்டில நடக்குற ஓரவஞ்சனை, ஸ்பான்சர் லாபிகள், அதிகார வர்கத்தோட தலையீடு இதையெல்லாம் படம் பேசுது. வெறும் உணர்சிகரமா மட்டும் இல்லாம, சமூக கேள்வியா முன்வைக்குது. அதனாலதான் ஸ்போர்ட்ஸ் படம்னு சொல்ல முடியாது. இது ஒரு சமூக அக்கறையோட எடுத்த படம்
அறிமுக நாயகன் கே.ஜே. ராஜேஷ் KJR. புது முகம்னு சொல்லவே முடியாத அளவுக்கு உடம்பை உழைச்சு, கேரக்டருக்குள்ள போயிருக்காரு. ஒரு வீரனோட ஏமாற்றம், கோபம், ‘நான் தப்பு பண்ணலையே’னு வர்ற வலி, கடைசில ‘நீதி கேப்பேன்’னு வர்ற விடாப்பிடி – எல்லாம் அவரோட உடல் மொழியிலயே தெரியுது. குறிப்பா நீதிமன்றத்துல அவர் பேசுற இடங்கள், ஆடியன்ஸை நேரா பாத்து கேக்குற மாதிரி இருக்கு.
வசுந்தரா காஷ்யப் பயிற்சியாளரா வர்றாங்க. வெறும் ‘சியர் கேர்ள்’ ரோல் இல்ல. மனசொடிஞ்சு போறப்ப தோள் கொடுக்குற, விதிமுறையை எதிர்து கேள்வி கேக்குற தைரியமான கேரக்டர்.
ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், விஜி வெங்கடேஷ், சிந்தூரி விஸ்வநாத் எல்லாரும் தங்க வேலையை சரியா செஞ்சிருக்காங்க. பாண்டே அதிகார வர்க கேரக்டரா வர்றப்ப ‘சிஸ்டம் இப்படிதான்’னு நம்மளே ஆத்திரப்படுற மாதிரி நடிச்சிருக்காரு.
*இயக்கம்
தென்பாதியன் இந்த கதையை ‘அவன் ஜெயிச்சானா’ங்குற ஒரு லைன்ல முடிக்கல. ‘ஏன் அவன் ஜெயிக்க விடல?’னு கேக்குறாரு. அதுதான் படத்தோட பலம்.
நீதிமன்ற காட்சிகள் படத்தோட முதுகெலும்பு.
ஆமா, சில இடங்கள்ல ‘தங்கல்’, ‘சக் தே இந்தியா’ மாதிரி ஸ்போர்ட்ஸ் பட டெம்ப்ளேட் ஞாபகம் வருது
ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத் ஸ்டேடியத்தோட வெக்கையை, கூட்டத்தோட கூச்சலை, நீதிமன்றத்தோட மௌனத்தை கேமராவுல பிடிச்சிருக்காரு. மேட்ச் சீன்கள்ல வியர்வை தெறிக்குது. கோர்ட் சீன்கள்ல வார்தை ஒவ்வொண்ணும் கனமா இறங்குது.
இசையமைப்பாளர் ஜிப்ரான். பின்னணி இசைதான் படத்தோட இன்னொரு நாயகன். ஹீரோ
‘அங்கீகாரம்’ ஒரு விளையாட்டு வீரனோட கதை இல்ல. அது நம்ம ஊர்ல எத்தனையோ திறமை இருந்தும் சிஸ்டத்தால நசுக்கப்படுற மனுசங்களோட குரல். வெற்றி பெருமையா, தோல்வி சோகமா மட்டும் இல்லாம, ‘அங்கீகாரம்’னு ஒரு விஷயத்துக்காக மனுசன் எவ்ளோ தூரம் போவான்னு காட்டுது.
விளையாட்டு ரசிகர்கள், கோர்ட் டிராமா பிடிக்குறவங்க, சமூக கதை தேடுறவங்க எல்லாருக்கும் இது புடிக்கும். வலுவான கருத்து
—
ரேட்டிங் : 4/5