
“ஆகாசம்லோ ஒக தாரா” படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!
இந்த திரைப்படத்தின் கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.
இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.
தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.
நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்
இயக்கம்: பவன் சடினேனி
கதை: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema
இசை: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)
