
திரௌபதி 2 ; விமர்சனம்
ரிச்சர்ட், ரக்ஷனா, ஒய்.ஜி மகேந்திரன், நட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் திரௌபதி 2. படம் என்ன சொல்ல வருகிறது ?
கோயில் நிலத்தை மீட்க ரிச்சர்ட் முயற்சி எடுக்க அதற்கு உதவும் நாயகி கோயிலுக்கு வரும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பான நினைவுகள் அவளுக்கு வருகின்றன. அதுவே படத்தின் மீதி கதை.
நாயகன் ரிச்சர்ட் வல்லாள மகாராஜா, நட்டி சமஸ்தானத்தில் கருட படையில் இருக்கிறார். நட்டி மன்னராக வலம் வந்தாலும் அவர் உடை நடை உடல் மொழி அனைத்தும் ஒரு மன்னருக்குரிய அந்தஸ்தை தரவில்லை.
நாயகன் ரிச்சர்ட் உடல்வாகும் இவர் வீரமும் இவரை அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் சிறப்பாக பொருந்துகிறது. நடனத்தைத் தவிர சண்டைக் காட்சிகளை சிறப்பாக செய்து இருக்கிறார்.
நாயகி ரக்ஷனா திரௌபதியாக வருகிறார். வீர தமிழ் மங்கையாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கடவுள் ராமனின் விசுவாசியாக திரு ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் சிறப்பாக தன் பாத்திரத்தை அறிந்து தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக தங்கள் பணியை ஆற்றி இருக்கின்றனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் நடந்த கில்ஜி, தூக்ளக் இவர்கள் வம்சத்தின் அராஜகத்தை சொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு மதப்போரை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
வரலாறு என்ன சொல்ல வருகிறது என்பதை சரியாக படிக்காமல் மேலோட்டமாக தெரிந்ததை, படித்ததை வைத்து ஒரு மிகப்பெரிய மதக்கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்தில் திரைக்கதை வடிவமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ஜி.
இந்தியர்கள் தங்கள் மதத்தை விட்டு கில்ஜி, துக்ளக் இவர்கள் என்ன மதமோ, மக்களை மாற சொல்கிறார்கள். இல்லை என்றால் அதிக வரி விதிப்பு, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு இவர்கள் ஆளாக்குகிறார்கள் என்ற பெயரில் ஒரு மதத்தை இழிவாக காட்ட இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மோகன் ஜி.
மனிதக் கறியை தின்னும் அளவுக்கு கொடூரமானவர்களாக காட்டி இருக்கிறார்கள். ஒரு மதத்தினரை இது பாசிச கொள்கைக்கு உடன்பட்டது போல் இருக்கிறது. ராமரை துதிக்கும் இடத்தில் மதம் மாறிய இந்து ஏன் தொப்பி அணிந்து கொண்டே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அந்த இடத்தில் காவல் படைகளும் இல்லை. பிறகு ஏன் தொப்பி ? அதுவும் தொப்பி போட்டுக்கொண்டே ராமரை வணங்குவது ஒரு இனக் கலவரத்தை தூண்டுவதற்காக அடிக்கோடுபோல் காட்டி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
மொத்தத்தில் பாரதத்தில் பல மதத்தினர் உறவுகளைப் போல் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் இந்த திரவுபதி 2வை இயக்கி தன் மத வெறியை காட்டி இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
மதுரையில் சமணர்களை கழுவில் ஏற்றியவர்கள் யார், அதற்கான காரணம் என்ன, அந்த வரலாறை எடுக்க முடியுமா அவரால் ? முடியாது.. ஏன் தெரியுமா ? விட்டத்தை பார்த்து எச்சில் துப்பியது போல் இருக்கும்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு.. அதற்காகத்தான் அதற்கு கேளிக்கை வரி விதிக்கிறார்கள். அந்த பொழுது போக்குக்குள் ரசிகனை மகிழ்விக்கும் திரைப்படமே வெற்றி படமாகும். அது தெரியாதவர்கள் அறியாதவர்களை பற்றி நாம் ஒன்றும் கூற முடியாது.
திரௌபதி 2 – பாசிச ஆதரவாளர்களின் உள் மனது
