சாரா ; விமர்சனம்

 

படம் என்ன சொல்ல வருகிறது ?

மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் நாயகி இன்னும் இரண்டு நாளில் திருமணம். முதல் நாள் அவள் பிறந்த தினம் பிறந்த தினத்திற்கு அலுவலகத்திற்கு வரும் நாயகியிடம் ஒரு மிகப்பெரிய பொறுப்பை உயரதிகாரி ஒப்படைக்க அந்த வேலையை ஆரம்பிக்கிறார். அதே சமயம் அந்த கட்டிட பணிக்கு மண் சப்ளை செய்யும் ஒப்பந்தக்காரர் கலப்பட மணலை தந்ததால் பணத்தை தராமல் நாயகி தகராறு செய்ய, அவரை கொலை செய்யும் முயற்சியில் ஒப்பந்தக்காரர் அந்த பில்டிங் வேலை செய்யும் செக்யூரிட்டியை ஒப்பந்தம் செய்கிறார்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க, அந்தக் கட்டிடத்தில் சித்தாள் வேலை செய்யும் ஒருவன் செக்யூரிட்டியை அடித்து விட்டு நாயகியையும் நாயகனையும் கட்டிப்போட்டு வைக்கிறார், ஏன் என்று தெரிந்து கொள்ள… பாருங்கள் சாரா.

சாக்ஷி அகர்வால் நாயகி.. விஜய் விஸ்வா நாயகன்.. கோமாளியாக வரும் செல்லக்குட்டி செக்யூரிட்டியாக வரும் ரோபோ சங்கர் நண்பனாக வரும் யோகி பாபு.  இவர்களை சுற்றி கதை நகருகிறது. மறுநாள் திருமணம். முதல் நாள் ஆபீஸ் வேலை இங்கு இருக்கிறது. அன்று பிறந்தநாள் சாக்ஷிக்கு.

சிறுவயதில் சாக்ஷிக்கு தன் கல்வியை விட்டு தரும் செல்லக்குட்டி, காரணம் நட்பு அந்த நட்பு தன் தாயின் ஆசையால் காதலாக மாற அதனால் ஏற்படும் பிரச்சனை கொலை வரை செல்கிறது. புதுமையான முறையில் திரைக்கதையில் சொல்லி புதுமையான நடிப்பை வழங்குகிறார் செல்லக்குட்டி. இயக்குனரும் இவரே. தன் நடிப்பிலும் கவர்ச்சியிலும் குறை வைக்காமல் சாக்ஷி, பார்க்கும் ரசிகனை பரவசப்படுத்துகிறார்.

காதல் செய்ய மட்டுமே விஜய் விஷ்வா.. ஆனால் உண்மையில் நாயகன் என்றால் செல்லக்குட்டி தான் கஜினி படத்தின் சூர்யாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தன் நடிப்பை வழங்கி இருக்கிறார். செல்லக்குட்டி ரோபோ சங்கர் வசனம் முழுவதும் நகைச்சுவை. யோகி பாபு அவ்வப்போது வருகிறார். சிரிக்க வைக்கிறார். மற்ற பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

கதைக்களம் ஒரு கட்டுமான பில்டிங்க்குள் நடப்பதாக இயக்குனர் வடிவமைத்திருப்பதால் பட்ஜெட்டுக்குள் படம் முடித்திருக்கிறார்.. வாழ்த்துக்கள்..