சொட்ட சொட்ட நனையுது ; விமர்சனம்

 

நிஷாந்த் ரூஷோ பிக் பாஸ் வர்ஷினி ஷாலினி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சொட்ட சொட்ட நனையுது படம் என்ன சொல்ல வருகிறது மனிதனுக்கு எந்த அளவுக்கு உயிர் முக்கியமோ அந்த அளவுக்கு … யிர் முக்கியம் தலையில் அது இல்லாமல் சொட்டையாக இருந்தால் அந்த மனிதன் எதை சந்திக்க வேண்டி இருக்கிறது ஊர் வாய் என்ன சொல்கிறது அவன் திருமணத்தின் நிலை என்ன இதை விவரிக்க வருகிறது சொட்ட சொட்ட நனையுது

நாயகன் சொட்டை தலையுடன் பெண் தேடும் படலம், பல நிராகரிப்புகள்.. இந்நிலையில் அவன் வீட்டு அருகில் இருக்கும் நாயகியை இவனுக்கு பிடித்துப் போக பெற்றோர் அரை மனதுடன் பெண்பார்க்க செல்ல நாயகிக்கு நாயகனை பிடித்து விடுகிறது.

- Advertisement -

பிறகு என்ன ? சந்தோஷம்.. திருமண ஏற்பாடுகள்.. சந்தோஷ கடலில் நாயகன் இருக்கும்போது துபாயில் இருக்கும் நண்பன் அவனுக்கு “நீலப் “படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க முதல் இரவுக்கு ரெடியாகும் ஆசையில் அதை பார்க்கும் நாயகன் அந்த படத்தில் தன் வருங்கால மனைவி இருக்க, கோபத்தில் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறான்.

என்ன செய்வது என்று தெரியாமல் சென்னைக்கு வரும் நாயகன் முடி வளர்க்கும் முயற்சியில் டாக்டரை சிந்தித்து மிக அழகாக தன் உருவத்தை மாற்றி மீண்டும் கிராமத்திற்கு வர அங்கு ஒரு அழகான பெண்மணி அவனுக்காக நிச்சயம் செய்யப்பட நாயகனின் அழகுக்கும் அவன் ஹேர் ஸ்டைலுக்கு மயங்கிப் போன நாயகி அவனை மனதார காதலிக்க, அவளின் பொழுதுபோக்கு ரீல்ஸ் எடுப்பது, இதில் பல குழப்பங்கள் ஏற்பட, இந்த திருமணத்தை நிறுத்தி விட நாயகனின் நண்பன் முயற்சி செய்ய நாயகிக்கு நாயகன் சொட்டைத்தலை என்பது தெரியவர கல்யாணத்தை நாயகியே நிறுத்தி விடுகிறாள். பிறகு நடப்பது என்ன இதுவே சொட்ட சொட்ட நனையுது படத்தின் கதைக்களம்.

படத்தின் கதைக்களம் நகைச்சுவை சேர்ந்தது. அதற்கேற்றார் போல் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரம் அறிந்து மிகவும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்து இருந்தனர். இவர்களுக்கு பக்க பலமாக வசனங்கள் மிகவும் கை கொடுத்திருக்கின்றன. இரண்டாம் கதாநாயகியின் ரீல்ஸ் மோகம் தற்போது ரீல்ஸ் உலகில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சொட்டைத்தலை  உடன் வரும் நாயகன் தன் சொட்டை தலையை மற்றவர்கள் பரிகாசம் செய்யும் போது அதனால் ஏற்படும் மன வேதனையை மிகவும் எதார்த்தமாக காட்டியுள்ளார்.

அவரின் தந்தையாக வருபவர் மிகவும் அருமையாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனின் நண்பனாக வருபவரும் மிக சிறப்பு. தன் வசன ஏற்ற இறக்கத்தின் மூலம் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

சொட்டையுடன் இருந்த நாயகன் தலையில் விக் வைத்து ஊருக்கு வரும் போது மிகவும் அழகாக தமிழ் சினிமாவின் வருங்கால நாயகர்கள் வரிசையில் இடம் பெறுவார் என்பது நமது எதிர்பார்ப்பு

பெண் பார்க்கும் படலத்தில் ஊர் வம்பு பேசும் இரண்டு பெண்கள் குறித்த இயக்குனரின் உ.ருவாக்கம் மிக அருமை.

சொட்ட சொட்ட நனையுது ஒரு நகைச்சுவை கலாட்டா

சொட்ட சொட்ட நனையுது- கதையல்ல நிஜம்

நடிகர்கள் – நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Adler Entertainment
இயக்கம் – நவீத் S ஃபரீத் (Debut)
திரைக்கதை & வசனம் – கலக்கப்போவது யாரு புகழ் ராஜா
இசை – ரெஞ்சித் உன்னி
ஒளிப்பதிவு – ரயீஷ்
எடிட்டிங்க் – ராம் சதீஷ்
கலை இயக்கம் – ராம்குமார்
நடனம் – அப்சர் மற்றும் சபரீஷ்
மக்கள் தொடர்பு – ராஜா